Pages

Friday, July 9, 2010

Kavithai

விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வரும் கடிதங்களை நினைத்துப்பார்த்தால் பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்களெள்லாம் பூசிக்கொள்ளும் வாசனை திரவியங்களில் வேண்டுமானால் வாசனை இருக்களாம் ஆனால் வாழ்க்கையில் தூக்கம் விற்ற காசில் தான் துக்கம் அளிக்கின்றோம் ஏக்கம் என்ற நிலையிலேயே இளமை கலிக்கின்றோம்.
எங்களது நிலா கால கணவுகளை எல்லாம் ஒரு விமானப் பயணத்துடனேயே விட்டு விட்டு கனவுகள் புதைந்துவிடும் என்று தெரிந்தே கடல் தாண்டி வந்திருக்கின்றோம்.
மர உச்சியில் நின்று தேன் கூட்டை கலைப்பவன் போல் வார விடுமுறையில் தான் காணமுடிகிறது இயந்திரமில்லாத மனிதர்களை,அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த நாட்கள் கடந்து விட்டன,இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாட்கள் கசந்து விட்டன.
அழகிய வீதிகள், அழகிய நண்பர்கள் மற்றும் கல்லூரி நாட்கள் இவையெல்லாம் ஒரு இரவு நேர கனவுக்குள் வந்து காணாமல் போய்விடுகிறது, நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்,மாட்டு வண்டி பயணம்,நோன்பு நேரத்து கஞ்சி,தெல்கா,பம்பரம்,சீட்டு,கோலி என சீசன் விளையாட்டுகள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையை எதிர்பார்த்து விளையாடி மகிழ்ந்த உள்ளூர் உல்க்கோப்பை கிரிக்கெட்,இவைகளை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் விசாவும் பாஸ்ப்போர்ட்டும் வந்து விழிகளை நனைத்து விடுகிறது.
வீதிகளில் ஒன்றாய் திறிந்த நண்பர்களின் திருமணத்தில் மாப்பிள்ளை அலங்காரம்,கூடி நின்று கிண்டல்டித்தல்,கல்யாண நேரத்து பரபரப்பு,பழைய சடங்குகள் மறுத்து போராட்டம்,பெண் வீட்டார் மதிக்கவில்லை என்று வரட்டு பிடிவாதங்கள்.
சாப்பாடு பரிமாறும் நேரம் என்க்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை,மறுவீட்டு சாப்பாட்டில் மணமகளின் ஜன்னல் பார்வை இது எதுவுமே கிடைக்காமல் கண்டிப்பாய் வர வேண்டும் என்ற சம்பிர்தாய அழைப்பிற்க்காக சங்கடத்தோடு ஒரு தொலைப்பேசி வாழ்த்துடனே தொலைந்து போய் விடுகிறது எங்களது நீ......................ண்ட நட்பு.
எவ்வளவு தான் சம்பாதித்தும் அயல் தேசத்தில் நாங்கள் ஏழைகள் தான், காற்றிலும் கடிதத்திலும் வருகின்ற சொந்தங்கள்,நண்பர்களின் மரண செய்திகளுக்கெல்லாம் அரபிக்கடல் மட்டும் தான் ஆறுதல் கூறுகிறது.
ஆம் இதயம் தாண்டி பழகியவர்களெல்ளாம் அரபிக்கடலை தாண்டி கண்ணீரிலேயே கரைந்து விடுகின்றனர், இறுதி நாள் நம்பிக்கையில் தான் இருதயம் சமாதானம் அடைகிறது. இருப்பையும்,இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்ப்பது இழப்பு மட்டும் தான்.
பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம்,முதல் பேச்சு,முதல் பார்வை,முதல் கணிவு இவைகளெல்ளாம் திணாரும்,திர்ஹமும் தந்துவிடுமா?
கிள்ளச் சொல்லி அழும் சத்தத்தை தொலைப்பேசியில் கேட்கிறோம்.கிள்ளாமலேயே நாங்கள் அழும் சத்தம் யாருக்கு கேட்குமோ?
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் பெற்ற பிள்ளையின் வித்தியாசப் பார்வை.
நெருங்கியவர்களின் திடீர் மரைவு இப்படி முகங்களின் எதிர் நோக்குதலோடு மீண்டும் அயல் தேசம் செல்ல முறுத்து அடம் பிடிக்கும் மனசிடம் தங்கையின் திருமணமும்,தந்தையின் கடனும்,பொருளாதாரமும் சமாதான்ம் சொல்லி அனுப்பி விடுகிறது மீண்டும் அயல் தேசத்திற்க்கு..............

No comments:

Post a Comment