Pages

Sunday, November 14, 2010

தியாகத் திருநாள்


பண்டிகை வரலாறு

மகனை பலியிடத் தயாராகும் இபுராகிமை தடுக்கும் வானவர் ஃசிப்ரீல் - ஒரு பாரசீக ஒவியம்

இறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இபுராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய இராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆன் மகவு பிறந்தது. இசுமாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்கலே இன்றைய அராபியர்கள். இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துனிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிளுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிம் அவர்களுக்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த கதையின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்

திருநாள் கொண்டாட்டம்

சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அனிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகலிலேயே நடத்தப்படுகின்றன

பலியிடல்

பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாரு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாரு பாத்துக்கொள்ளப்படுகின்றது.



No comments:

Post a Comment