Pages

Thursday, May 23, 2013

கர்ப்ப காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை சரிசெய்ய சில டிப்ஸ்


 கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அளவிட முடியாத மகிழ்ச்சியையும், 9 மாதங்களுக்குப் பின் ஒரு புது உயிரை உலகிற்கு தரப்போகும் பேரு வகையையும், அள்ளித்தரக்கூடிய அற்புதமான ஒரு காலகட்டமாகும். எனினும், இக்காலகட்டத்தில், குறிப்பாக முதன்முறையாக கருத்தரித்திருப்போர், அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம். இவற்றுள் சில அசௌகரியங்கள், கர்ப்ப காலமான 9 மாதங்கள் முழுவதிலும் நீடிக்கக்கூடும், ஆனால் சில அசௌகரியங்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ அல்லது மூன்று மாத காலமோ இருந்து, பின் மறைந்து விடும். எவ்வாறாயினும், இந்த அசௌகரியங்களை, குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, ஓரளவுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியவாறும், எப்படியாவது இயற்கை முறையில் குறைப்பதற்கான தேவையை நன்கு உணர்வோம். அவ்வாறு கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும். இந்த தசைப்பிடிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை சிறிது காலத்திற்கேனும் வராமல் தடுப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அந்த அசௌகரியத்திலிருந்து விடுபடுங்கள்.

No comments:

Post a Comment